![]() |
வெள்ளியை உருக்கி , மிளிரும் தேகமாய்
வானில் வெளிச்சம் தராமல் ஏனோ வெண்ணிலவே,
வானில் வெளிச்சம் தராமல் ஏனோ வெண்ணிலவே,
இன்று கரு மேகமாய் தேகத்தில் ஒளி குன்றி நிற்கிறாய்...!!
பௌர்ணமியாம் அவள் கண்களும்,
உன்னைப்போல் கலை இழந்து,
இன்று ஐப்பசி மேகமாய் வாடியுள்ளதே !?
நட்சத்திரங்களின் சேர்க்கை இல்லாமல்,
நீ நிற்கும் தனிமை தான்,
அவளையும் வாட்டுகிறதோ?
யுகம் யுகமாய்..
நீ காக்கும் மௌனவிரதம் போல்,
அவள் சிற்றிதழ் இன்று சிரிக்கவும் மறந்ததேனோ?
ஓரிடத்தில் உன்னை சுகந்திரம் அன்றி..
சிறைப்பிடித்த ஆண்டவன்,
அவள் எண்ணங்களின் பாதைகளையும் சிறைப்பிடிக்கிறானோ?
வளரும் நேரங்களில்,மறையும் தேகம் கொண்ட வெண்ணிலவே..
நகரும் நொடிகளில்,இவள் கண்ணீரும் மறைய ஓர் வழி சொல்லாயோ??
-மாயா.