என்னையும் கேட்காமல் நான் சுவாசிக்கிறேன் !!
என்னையும் அறியாமல் உன்னை நேசிக்கிறேன் !!
மழைத் துளிப் போல் நித்தமும் உன்னிடம் வீழ்கிறேன் !!
காதலனே, உன் விழியில் நீர் வந்தால், நான் மடிகிறேன் !!
இதழைப் பிரிக்கத்தான் நினைக்கிறேன் !!
ஆயினும் , மௌனங்களைப் படிக்கிறேன் !!
கனவுகளில் உன் தோள் சாய்கிறேன் !!
நிஜங்களில் உன் விரல் தொடவும் மறுக்கிறேன் !!
சிறகுகள் விரித்துப் பறக்கத்தான் நினைக்கிறேன் !!
ஏனோ கூண்டிலே கிளியாய்த் துடிக்கிறேன் !!
வார்த்தைகள் பல தேடி , கவிதைகள் கோர்க்கிறேன் !!
கோர்த்த வார்த்தைகளில் இல்லாத பொருளைத் தேடுகிறேன் !!
பொருள் சேர்க்கத்தான் இன்று வந்தாயோ !!
காதலின் அர்த்தம் ! அதை என்னுள் சேர்தாயோ !!
-மாயா

















