Popular Posts

Friday, December 30, 2011

வாராயோ என்னிடம்..!!






மனம் கொண்ட ஆசைகளைத்,
திரை செய்யவில்லை நான் !!
சிப்பியில் அடைக்காத்த முத்தாய் ,
மௌனம் காத்தேன் !!
தென்றலின் வருகைக் கண்டு ,
ஆவலாய் மலர்ந்து நிற்கும் மொட்டினைப்போல் ,
இன்று காத்திருக்கிறேன் உன் பார்வைக்காக !!
அலைமேல் நுரைகள் நகர்ந்துவிடுமோ அன்பே ??
உன் வருகையை எதிர்பார்க்கும்
என் கண்கள் தான் சோர்ந்து விடுமோ ??
தூரலின் பின்பும் தொடரும்
கிளை மேகங்களின் சாரலாய் ,
இருள் பாய்ந்த நெஞ்சுக்குள்ளும் ,
காண்கிறேன் கிழக்காய் ஓர் விளக்கை !!
காதலின் ஜோதியோ அவை ??
விடைக்கான வாராயோ ??
என்னவளே .. அதற்கான பதிலை
அருகாமையில் உணர்த்த வாராயோ ??

                                                                      -மாயா

No comments:

Post a Comment