Popular Posts

Tuesday, September 27, 2011

அவள் !!


நான் எட்டு வைத்த முதலடியோ,
அவள் எல்லையற்ற மகிழ்ச்சியின் பிறப்பிடம்..!

என் ஆனந்தங்களின் பின்னால் ,
மறைந்திருக்கும் !! அவள் தியாகங்கள் !!

அவளன்றி நானில்லை என்பேன்!
நான் இல்லாவிடில், அவள் அவளாக அல்ல என்பதறிந்து !!

என் அறிவுப் பசியை முன்பு  தூண்டியவள்..
அகரத்தை ஆழமாகக் கற்றுத்தந்தவள் !!

பசியின் தடம் கூடத் தெரியாமல்,
தன் குருதியை உருமாற்றி, எனக்குப் பாலூட்டியவள் !!

என் கண்ணீர் கரைசேரும் முன்னமே,
அவள் கைகள் என் முகத்தைப் புதைத்துக்கொள்ளும் !!

பாறைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற சிற்பங்களாய்..
ஒரு  முகத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற தெய்வங்கள் தானே அவள் !!

வார்த்தைகளின் தேடல் தான் முடிவிடம் அடையாது..
அவளை முற்றும் வெளிப்படுத்தவே !!

என்னைப் பார்க்காத நொடியிலிருந்தே என்னைக் காதலிப்பவள்..
இவ்வுலகம் விட்டு, அவளைப்பார்க்காத தூரம் சென்றாலும், காதலிப்பேன் என் உயிருக்கும் மேலாக !!

அவள், என் உயிரின் பிறப்பிடம் !!
அவள், என் தாய் !!

                                                               -மாயா

 

Friday, September 23, 2011

என் காதல் திருமணம்..

[ முகம் தெரியாத பாத்திரங்களுக்குத்
 தோற்றுவித்த கவிதைகளுக்கு மாறாக,
 என் கணவருக்காக,
 நான் சிந்திய மைகளின் வரைபடம் இது... ]

வார்த்தைகளின் பரிமாற்றத்தால்..
தொடங்கிய சிநேகம்..

மழைத்துளிகளின் ஆசியுடன்..
உருவாகிய நேசம்..

தொடர்ந்த உரையாடல்களால்..
வளர்ந்த காதல்..

முற்றத்தின் கோலமாய் வாழ்வில் தொடங்கி,
என்றும் பிரியா  காலமாய் மாரியதற்றே இந்த துணை..

தயக்கங்கள் தான் விலகி, தாலாட்டும் பனிக்காற்றின் சாட்சியாய்,
வார்த்தைகள் அற்ற மௌனங்களினால் உரையாடினோம், அன்று..!




இதயத்தைத் தடுமாறச் செய்யும் அனுபவமாய் நிறைந்த காதலை,
சொற்களால் பகிர்ந்து கொண்டோம், நிலவின் சாட்சியாய் நேற்று..!

நேரங்களில் நிறைந்து சிறு நொடியும் பிரியாமல்,
இணைந்தாய் என் நினைவாய்..

அக்கினியின் சாட்சியாய், என்றும் வாழும் உயிராய்
நிறைந்தாய்  அன்பே என்னுள், இன்று..!!

                                                                -மாயா

Thursday, September 22, 2011

அழியாத சுவடு காதல்..

உன் கை கோர்த்து நடந்தப்  பாதைகளில் பதிந்த சுவடுகள்,
மெல்ல மெல்ல மறையப் பார்க்கின்றன..!!
என் சொந்தம் தானோ என்று பொத்திவைத்த நிழலும் ,
இருள் வர மறைந்துத்  தேய்கின்றன..!!
பௌர்ணமியாய் மின்னிய நம் காதலும்,
இன்று தேய்பிறை தேகமாய் நகர்கின்றன..!!
மடித்தாலும் மறையாத நினைவுகள் மட்டும்..
எந்தன் நியாபகத்தை சோதித்துப்பார்கிறது..!
வேண்டாம் என்றாலும் உடலோடு சேரும் சுவாசமாய்,
மறைத்து விட முடியாது அன்பே.. உன் தாக்கத்தை..!!
அன்பில் திழைத்து உன்னோடு கைகள்  கோர்க்க எண்ணுகிறேன்..
ஏமாற்றங்களைப் பரிசளித்து , என் கண்ணீரை வரவழைத்திடுவாயோ??
மேலும் அழவே , சற்றும் சக்தி இன்றி ஏங்குகிறேன்!!
'அழியாத சுவடடி  நம் காதல் எனக்கு'..!!

                                                     -மாயா

Tuesday, September 20, 2011

ஒற்றை வாழ்கை இது!


மரக்கிளைகளின் கீழே உள்ள நிழலுக்குத் தெரிவதில்லை..
இலைகளை அனுபவிக்கும் சுட்டெரிக்கும் சூரிய வெட்பத்தை..!!
தேன் சேர்க்கும் வண்டுகளுக்குத் தெரிவதில்லை..
ஓர் மலரின் புன்னகையை அது உறிஞ்சுகிறது என்று..!!
எங்கும் உலவும் தென்றலுக்குத் தெரிவதில்லை..
தான் கொள்ளும் பயணங்களின் வரைப்படத்தை..!!
முற்றும் இடங்களோ,
சந்திக்கும் சொந்தங்களோ,
எவருக்கும் தெரிவதில்லை..
இந்த வரமான வாழ்க்கைப் பயணத்தில்.
திரை பின்னாலும் தெரியாத சில உண்மைகளும்..
புன்னகைக்குப் பின்னாலும் ஒளிந்துக் கொண்டிருக்கும் சில வலிகளும்..
எவரும் வரவேற்கவில்லை, மறைதிடவும் இல்லை..
மறுக்கவும் இல்லை!! இந்நிகழ்கால நிஜங்களை!
ஒரு பக்கமே ஆயினும், ரசித்திடுவோம்..!!
ருசிதிடுவோம்.. ஒற்றை வாழ்கையை..
இந்த ஒற்றை வாழ்கையை..!!

                                                        -மாயா

நீளாதோ இந்நேரம் ??




விண்ணிற்கும் தான் தெரிந்துவிட்டதோ ?!
இரு இதயங்களின் சத்தம் !!
வாழ்த்துரையாய் சாரலைத் தூவுகிறது கண்முன்னால் ...
காற்றுக்கும் தான் புரிந்து விட்டதோ ?!
என் கண்களின் தேடல் !!
நங்கள் அமர்திருந்த ஊஞ்சல் ஆட்டத்தை நிருத்தியப்பின்னும் ,
காற்றில் ஆடும் ஆடைகளாய், அவன் பக்கம் ...
மனதோடு ஆடிக்கொண்டிருந்தேன்.
இதமாய் தொட்டுச்சென்ற தென்றலின் மேல் ,
சின்ன கோபம் வந்தது ஏனோ??
காதல் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்க தான் வந்தாயோ என்று..
மௌனங்களின் இடையிலும் கேட்க முயன்றேன்..
மாற்றிக் கொண்ட பார்வைகளின் மொழிகளை..!!
ஆயினும் சில நொடிகளில்,
உன் பார்வையின் கதிர்கள் என் மேல் விழ,
வெட்கத்தால் வரவேற்க மறுத்தேன்.!!
இன்னும் நீளாதோ என்று கேட்டுக்கொண்டேன்..
அருகாமையின் துணையாய் வரவே..
காலத்திடம்.. !!!

                                          -மாயா
                 

Monday, September 19, 2011

விடியா இரவு..


விடியலும் தான் இன்று ,
பொடிநடை போடுவதேனோ ??
துயரங்கள் தான் விடிய,
இரவும் விடிய வேண்டும் என்பதனாலோ?!?!
துளி நீரை மேகம் சிந்தினால் ..
மழை என ரசிக்கும் என் கண்களும் இன்று..
மழை என ஒத்திகைக் காட்டுகிறது...!
வெயில் மட்டும் உலவும் தரையின் மேல் ,
பாதகங்கள் உடன் போக,
வழி தெரியாத வழிப்போக்கனாய் ..!!!
என் நினைவுகளும் இந்த இரவினை ..,,
நிலையற்று நகர்வதேனோ ....??
ஒரு பார்வையும் படாமல்,
அலை நீர் மட்டும் தொட்டுச் செல்லும்...
தொலைதூரக் கடற்கரையின் முடிவிடம் தேடி..
சிறு நத்தையும் உலவுவதைப் போல் ..!!
நிகழும் எதுவும் தொடராமல் ...
மனித மூச்சு உலவாத இடத்தில்...,
குடில் ஒன்று வேண்டுகிரதே ..!!
என் சிறு இதயம்.. துயர் கொண்ட ..,
இடிந்த சுவராய்....!!!

-மாயா

தொலைந்த என் காதல் ...!!!




இன்றொரு நாள் எண்ணுகிறேன் ...!
அன்றொரு நாள் நடந்தவற்றை ...!
என்றும் உதட்டின் ஓரம் புன்னகை உடன் ,
பிஞ்சு கைகளில் நீ அணிந்திருந்த வளையல்கள் ...,
கூட்டத்தின் இடையில் ,
என்னை விட்டுப் பிரியா வண்ணம் உன் கைகளால்
என்னைப் பற்றிக்கொண்டது ...!
கொலுசு கடைக்காரனிடம் கொலுசு வாங்கியது !
மணல் வெளி உன் அழகிய பாதத்தைச் சுட்டு விடுமோ என்று ,
என் முதுகின் மீது நீ தொற்றிக்கொண்டது ...!
பூ போட காபி பாவாடை முட்களின் இடையில் மாறிய போது ,
'மாமா' என்று அழுதது ...!
உன் வருகை முன் ...உன் தாயின் கர்பத்திலிருந்து,
நீ வந்த நேரத்தில் ...!
"உன்னவள் பிறந்து விட்டாள் " என்று என் தாய் கூரிய பொழுதில் இருந்து ,
தொடங்கிய காதல் கதை இது..
கதை காவியமாக மாறிய இந்த பொழுது வரை ...!
எண்ணங்கள் என் நினைவில் நிலையாய் இருக்கிறது...!
இன்றொரு நாள் எண்ணுகிறேன் ...!
உன் குழந்தையை நான் ஏந்துகையில் ....!
நினைவுகள் நின்றுவிடுமோ ...என்றே தயக்கம் எனக்கு ...!
உன் கணவன் தன் செல்வத்தை ,
என் கைகளில் இருந்து எடுத்து சென்றவுடன் ...!

-மாயா


இன்று நான் அனுபவித்த ஒரு நொடி..


ஆயிரம் கவிதைகள் படிக்கவில்லை..
ஆயினும் அர்த்தங்கள் அல்லாத ஓசைகளுக்கு உணர்ந்தேன் அர்த்தங்கள்..
மெல்லிய மௌனங்களின் ஊடுருவல் என்னுள்..
கவிதையில் மட்டும் நான் வரைந்து கொண்டிருந்த காதல் நாயகிகளின் நிலையில் நான்!
தென்றல் போல் இதயத்தை வருடிய காதலனின் பார்வைகள்!!
எங்கோ தூரத்தில் கேட்கும் முன்னொரு நாள் நான் ரசித்த பாடல்..
அதன் வரிகளின் அடையாளம் இவள் தானோ என்பதை வினாவும் அவன் கண்கள்!
முற்றிய கிளையின் மேல் ஒற்றைப் பூவாய்..
காதல்.. இவ்வளவு அழகாய்..
காதல் கொண்ட வாழ்க்கை அதனினும் அழகாய் உணர்ந்தேன் இந்த நொடி..!!
அவன் காதலின் ஆழத்தை நான் உணர்த்த இந்த நொடி!!

- மாயா