Popular Posts

Tuesday, September 20, 2011

ஒற்றை வாழ்கை இது!


மரக்கிளைகளின் கீழே உள்ள நிழலுக்குத் தெரிவதில்லை..
இலைகளை அனுபவிக்கும் சுட்டெரிக்கும் சூரிய வெட்பத்தை..!!
தேன் சேர்க்கும் வண்டுகளுக்குத் தெரிவதில்லை..
ஓர் மலரின் புன்னகையை அது உறிஞ்சுகிறது என்று..!!
எங்கும் உலவும் தென்றலுக்குத் தெரிவதில்லை..
தான் கொள்ளும் பயணங்களின் வரைப்படத்தை..!!
முற்றும் இடங்களோ,
சந்திக்கும் சொந்தங்களோ,
எவருக்கும் தெரிவதில்லை..
இந்த வரமான வாழ்க்கைப் பயணத்தில்.
திரை பின்னாலும் தெரியாத சில உண்மைகளும்..
புன்னகைக்குப் பின்னாலும் ஒளிந்துக் கொண்டிருக்கும் சில வலிகளும்..
எவரும் வரவேற்கவில்லை, மறைதிடவும் இல்லை..
மறுக்கவும் இல்லை!! இந்நிகழ்கால நிஜங்களை!
ஒரு பக்கமே ஆயினும், ரசித்திடுவோம்..!!
ருசிதிடுவோம்.. ஒற்றை வாழ்கையை..
இந்த ஒற்றை வாழ்கையை..!!

                                                        -மாயா

1 comment:

  1. தேன் சேர்க்கும் வண்டுகளுக்குத் தெரிவதில்லை..
    ஓர் மலரின் புன்னகையை அது உறிஞ்சுகிறது என்று..!!
    - i din get this ?
    இருந்தாலும் கவிதைக்கு பொய் அழகு .... !!!!!....ரசிக்கிறேன்...!!!!....

    ReplyDelete