Popular Posts

Friday, May 11, 2012

தனிமை !!


உரிமை  அல்லாவிடினும்...
எவரேனும் ,
உரையாட மாட்டனரா ??                                
என்ற எண்ணம் உதித்தது ஏனோ??
என் ஒற்றை உடமை ஆகிவிட்ட,
தனிமையின் குரலைக் 
கேட்டப்பின்னர் !! 
                     
                      -மாயா  
 

பூக்களாய் நான் !!



பூக்களாய்  நீயும் !!
வாசமாய் நானும் என்றாய் !!
வாசம் சேராமல்,
விட்டுச் சென்றாய் !!
இன்று  தான் உணர்கிறேன் !!
என்னைக் காகிதப் பூவென்று 
எண்ணி விட்டாயோ என்று !!

                             -மாயா