Popular Posts

Wednesday, March 14, 2012

தாய்க் குரல்.!!



பசி என்று அழுகையால் அழைக்கிறாய் என்னை..
ருசி என்று பசியாற்ற பால் இல்லை என்னிடம்..

கைத்தட்டி விளையாட பொருள் கேட்கிறாய் கண்ணே..
பொருள் இல்லை நம்மிடம், பொம்மையாய் உன் அம்மா..

பாத்திரத்தில் சோறுண்ண பாக்கியம் இல்லென்றால் என்ன?
பத்திரமாய் உன்னைப் பொத்திவைக்க என்னிரு கைகள் உண்டு இங்கே..

குடி வளர்த்து உன் தந்தை நம் குடிசையை மறந்தான்..
நம் குடி வளர எந்நாளும் நீ குற்றம் அகன்று வாழாய்  மகனே..

களை எடுத்து உன்னைக் கரைசேர்க்க தாயுள்ளேன்..
கலைகள் பல பயின்று ஐயனாய் வழிகாட்டி வாழ்ந்திடு மகனே..
                                                                                       
                                                                                                     -மாயா



No comments:

Post a Comment