சிறுகதை அல்ல. படித்ததில் பிடித்ததும் அல்ல.
இது, பிடித்த நேரங்களின் தொலையாத நினைவுகள்.
என்றும் தொடரும் காட்சிகளுக்கு எவரும் வாழ்வில் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
முன்னொரு நாள், நாம் தொலைத்த ஆசைகள் யாருக்காகவோ விட்டுக்கொடுத்த சொந்தங்கள் என்று முன்னம் நடக்கும் என்று நம்பி , நடந்திராத காட்சிகளைச் சுற்றியே நம் எண்ணங்கள் ஓடுகின்றன.
பிடித்த இடம், உடை, உணவு, நிறம், பொருள் என்று சதை இல்லாத அசையாதவைகள் மாறலாம்.
அனால் மனம், உணர்வு, உணர்ச்சி கொண்ட மனிதர்கள் கூட அந்தப் பட்டியலில் சேர்வதுண்டு.
அவன் எண்ணங்களும் , வளர்த்த கனவுகளும் கூட அவனுக்கே எதிர்ச்சொல்லாய் போவதுண்டு.
மனிதனைப் படைக்கயில், இயற்கை செய்திட்ட பிழையே இந்த எண்ணங்கள் என்று சில நேரம் தோன்றுவதுண்டு.
அடைமழைப்பின் கிளைகளின் இளைய தூரல்களாய் நினைவோரத்தில் சில காலங்களும் நிற்பதுண்டு. முற்றுப்புள்ளி இட்ட நம் எண்ணங்களும் பல நேரம் நம் நிம்மதியைத் தட்டிப்பார்க்க எட்டி வருவதுண்டு.
சூழ்நிலைக் கைதிகளாக நாமும் அவற்றில் சிக்கியதும் உண்டு.
முன்னொரு நாள் எவரோ கொடுத்த பரிசுப் பொருளைப் பாதுகாக்க அலமாரியை சுத்தம் செய்திருப்போம்.
அனால், அவர்களின் உறவினைக் கைவிட்டிருப்போம்.
அந்த இனிமையான கடந்தகாலமும் இன்று திரைப் பின்னால் கண்ணீர் சூழ மறைந்து விட்டதன் காரணம் என்னவோ, அவ்வுறவில் நம் கையாலாகாத் தனம் தான்.
கனமான சில நினைவுகளை எட்டாத மலையின் மேல் ஒழித்து விடவே எல்லோருக்கும் ஆசை.
எழுதுகோல் வைத்து பதிவுகளைப் பதித்த காலங்களின் மேல் அல்ல குற்றம்.
எண்ணங்களைக் கட்டுப் படுத்த தெரியாத மனதின் மேல் தான் குற்றம் வடிகிறது!
முனிவர்களின் தவங்கட்கு வரங்கள் தருவது இறைவன் என்றால், பல கோடி மனங்களில் தவமாய் புதைந்துக் கிடக்கும் குமுறல்கட்கு வரங்கள் தருவது யாரோ !! காலமோ??
-மாயா

Good one after a long time!! Keep up the good work!! :)
ReplyDeleteThanks Bala :) Sure!!
ReplyDeletevery good madam!! cheers!!
ReplyDeletegood one sheelu... really nice da!!:)
ReplyDelete