
விடியலும் தான் இன்று ,
பொடிநடை போடுவதேனோ ??
துயரங்கள் தான் விடிய,
இரவும் விடிய வேண்டும் என்பதனாலோ?!?!
துளி நீரை மேகம் சிந்தினால் ..
மழை என ரசிக்கும் என் கண்களும் இன்று..
மழை என ஒத்திகைக் காட்டுகிறது...!
வெயில் மட்டும் உலவும் தரையின் மேல் ,
பாதகங்கள் உடன் போக,
வழி தெரியாத வழிப்போக்கனாய் ..!!!
என் நினைவுகளும் இந்த இரவினை ..,,
நிலையற்று நகர்வதேனோ ....??
ஒரு பார்வையும் படாமல்,
அலை நீர் மட்டும் தொட்டுச் செல்லும்...
தொலைதூரக் கடற்கரையின் முடிவிடம் தேடி..
சிறு நத்தையும் உலவுவதைப் போல் ..!!
நிகழும் எதுவும் தொடராமல் ...
மனித மூச்சு உலவாத இடத்தில்...,
குடில் ஒன்று வேண்டுகிரதே ..!!
என் சிறு இதயம்.. துயர் கொண்ட ..,
இடிந்த சுவராய்....!!!
-மாயா
ennaduya situation ku poruthamaana kavithai da sheelu....hmm...
ReplyDeletek may i knw who is mayaa??
Maya is my name. My pen name anna.
ReplyDeleteReally very nice da... gud thoughts :)
ReplyDeleteஅலை நீர் மட்டும் தொட்டுச் செல்லும்...
ReplyDeleteதொலைதூரக் கடற்கரையின் முடிவிடம் தேடி..
சிறு நத்தையும் உலவுவதைப் போல் ..!!
--------Excellent !!!!!!!