Popular Posts

Wednesday, October 19, 2011

என் நட்பிற்காக!!





ஆலமரத்தின் விதைஎனவே ..
விழுந்தாய் என் இதயத்திலே !!
துளிர் விட்டது மரத்தினைப் போல்
நம் நட்பும்..!!
சிறு கொழுந்தென காட்டியது ,
நம் பாடங்களின் வலிமையே !!
வீழும் விழுதுகளைப்  போல் வீழ்ந்தது ,
என் எண்ணம் ...என்றும் பிரியமாட்டோம் என்றே !!
நிழல் நீட்டும் இலக்கணமாய் என்றும்,
என் கையோடு கோர்த்து நிற்கும் உன் இணைப்பு !!
மடிக்க நினைத்தாலும் முடியாது நண்பனே,
நம் நட்பின் காலத்தை !!
வாழ்நாளின் இறுதி வரை,
இணைந்தே இருப்போம்!!
நட்பின் சுவடுகளோடு என்றும்...!!

                                                         --மாயா  

No comments:

Post a Comment