Popular Posts

Monday, March 8, 2021

 

கேளடி கண்மணி !

கேளடி கண்மணி !
கவி கேளடி பெண்மணி!

பூக்களோ பவளங்களோ இல்லடி ..
நீ வந்த பாதை கற்களும் முட்களுமடி !

தென்றல்தான் நீயென்று சொல்வாரடி ..
உன் புயற்பயணங்களின் வீரியம் அறியாதவரடி !

நஞ்சு உன் வார்த்தையெனச் சொல்வாரடி ..
சுயமரியாதையின் போர்வையதென தெரியாதவரடி !

கைக்கொட்டி கேலியாய் சிரிப்பாரடி ..
நீ வெறும் பெண்தானே என்றும் உரைப்பாரடி !

உன்னுடைகள் தான் இவை அவையென குறிப்பாரடி ..
பெண்ணென்றால் புவியென உணராதவறடி!

திரை விளக்கி நீ கேட்டால் தடுப்பாரடி ..
கொஞ்சம் நீ பாரடி .. அவர் மதியற்றோரடி!

சபைமுன் உன் சொற்களைக் களைப்பரிப்பாரடி ..
மாகாளியின் உறு நீயென்று மறந்தோரடி !

உன் குறளுக்கோ அளவுகோள் அளப்பாரடி ..
குவியுமே கரகோஷங்கள் ஓர்நாள் ! நீ களங்காதடி !

பெண் துரிதம்தான் ஆபத்தென அலர்வாரடி ..
ஆண் ஆதிக்கத்தின் விழும்பது ! விலகிச்செல்லடி !

தலை குனிந்து வெட்கிச்செல்ல சொல்வாரடி ..
நேர்கொண்ட பார்வையின் தன்னலமறியாதவரடி !

மணங்கொண்டவளை அடியவளாக ஆட்பறிப்பாரடி ..
மங்கை அவளுக்கோர் மனமுண்டென்று உணராதவரடி ..

இரவல்ல உன் பொழுதென்று அடைப்பாரடி ..
உன் கனவுகட்கு, இரவில்லை பகலில்லை என தெரியாதவரடி !

பிஞ்சு கைகூப்பி நாம் கெஞ்சியதை புறக்கணித்தாரடி ..
நம் பைகளில் மாற்றாய் பிறந்த சில மிருகங்களடி !

தாயென்றும் துணையென்றும் சேய்யென்றுமானாயடி ..
கவினாகவும் மதியாகவும் வழிகாட்டி வாழ்வாயடி ..

கவினாகவும் மதியாகவும் வழிகாட்டி வாழ்ந்தாயடி ..
தாயென்றும் துணையென்றும் சேய்யென்றுமாவாயடி !

கேளடி என் கண்மணி !
உன் வினாவை உறக்கவே பெண்மணி !
 

                                                                        
                                                                                   - மாயா