Popular Posts

Friday, December 23, 2011

கனவுக்கன்னி !!

கானல் நீரில் குழைத்த வண்ணங்களாய் நின்றாயே ,
என் கனவின் காட்சிகளில்..!!
புயல் எதிர்த்த மரமாய் நின்ற எனக்கு,
நித்திரையில் காட்டினாயே தென்றலின் தேகத்தை..!!
எத்தனை நாள்தான் தொடருவேன் அன்பே, கனவிலேயே?
கற்பனை உருவத்திற்கு உயிரூட்ட வாராயோ?
பெண்ணே ,
என் வாழ்வின் மீதியாய்..
என் உயிரின் பாதியாய்..
என் கைகள் இணைத்து ,
உன் காதலை பரிசளிக்க !?
                                                       -மாயா

No comments:

Post a Comment