Popular Posts

Saturday, October 15, 2011

புன்னகையுடன் !!





விண்ணில் இருந்து
வந்த முதல் துளி..,
குவிந்த மண்ணில் வீழ்ந்து ,
மண்ணின் வாசம் வெளிவந்த நேரம் இன்று..
என் இதயத்தில் புதைந்து கிடந்த ,
நினைவு விதைகள் முளைக்கின்றனவோ..
இரவில் மிளிரும் பளிங்கு கற்களைப்போல்.,
மின்னிய என் சிநேகிதங்கள்.!
இரவின் விண்மீன் மாநாடைப்போல்...,
நாங்கள் அமர்ந்த வகுப்பின் தடங்கள்...,
பாறையில் உறங்கிக் கொண்டிருக்கும்
உளியின் கைப்படாத சிற்பங்களாய்...
எங்கள் பிஞ்சு நெஞ்சங்களிலே தங்கிய ஆசைகள்...
குளிர் காற்று பட்டும் திறந்திடாத மொட்டுகளின் மேல்
ஆதரவில்லாத பனி துளிகளை ,
அகற்றிய சூரியனாய்..
இமை தாண்டி வந்த பாரங்களை ,
அகற்றிய தோழமைகள்..
உருகும் உள்ளங்களுடன் நாங்கள்,
பகிர்ந்து கொண்டோம் சில அன்பு கனாக்கள்..
விண்நீர் கடல் சேரும் இந்நேரம்,
என் கண்ணீரும் பொங்கி..
கன்னங்களின் கரை சேரும் இந்நேரம்..
புன்னகையுடன்...!!
                             
                                                    - மாயா

1 comment: