Popular Posts

Thursday, June 18, 2020

தேன் அல்ல தேனீர் !!




சிலந்தியின் வலை என்று தெரியவில்லை அப்பொழுது..
காதல், சிறு தூண்டில் என்றே எண்ணினேன்..


வானவில் போல், அழகாய் சிரிக்கும் உன் பார்வையோ ,
என் பார்வையின் பாரத்தைக் கூட்டும் என்று தெரியவில்லை அப்பொழுது..


உயிரின் வருகை எனவே எண்ணிக் கொண்டிருந்தேன்..
உன் உயிரையும் நீ தொலைத்துவிடுவாய் என்று எவரும் சொல்லவில்லை அப்பொழுது..


என் நினைவோடு விளையாடும் நிஜமாகும் என்று நினைத்தேன்..
ஏனோ காதல்,
அதன் வரவோடு விளையாட கைபொம்மை ஆக்கிவிட்டது என்னை!!


நன்றி சொல்ல வேண்டும் அன்பே உனக்கு..
காதலோ தேன் கூட்டின் தேன் என்று எண்ணிய எனக்கு,
தேனீர்களின் கோரங்களாய்க்  கூட இருக்கலாம் என்று உணர்த்தியதற்கு..!!

                                                                    
                                                                                                                                                              -மாயா

No comments:

Post a Comment