கானல் நீரில் குழைத்த வண்ணங்களாய் நின்றாயே
என் கனவின் காட்சிகளில் !!
புயல் எதிர்த்த மரமாய் நின்ற எனக்கு
நித்திரையில் காட்டினாயே தென்றலின் தேகத்தை !!
எத்தனை நாள்தான் தொடருவேன் அன்பே, கனவிலேயே?
கற்பனை உருவத்திற்கு உயிரூட்ட வாராயோ?
பெண்ணே ,
என் வாழ்வின் மீதியாய்
என் உயிரின் பாதியாய்
என் கைகள் இணைத்து
உன் காதலை பரிசளிக்க !?

No comments:
Post a Comment